தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள பிலிவர்ஸ் என்னும் தேவாலயத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிரியாராக இருந்துள்ளார் நாகர்கோவில் துடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டான்லிகுமார்.
இவர் தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் கைபேசி எண்களை மத போதனை செய்வதாக கூறி பெற்றுள்ளார்.
பின்னர் அந்த பெண்களின் எண்ணிற்கு அழைத்து பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக சபை மக்கள் சார்பாக பெத்தநாடார்பட்டி ஊரை சேர்ந்த கல்யாணி என்பவர் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சிறையில் அடைப்பு
பிரார்த்தனை செய்ய வரும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்
கல்யாணி என்பவர் அளித்த புகாரில், தனது மகள் தேவாலயத்திற்கு சென்ற பொழுது, தனது மகளிடம் வயிற்றில் கை வைத்து ஜெபிக்கிறேன் என்று கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அதே போல் தேவாலயத்திற்குள் கேமராக்களை பொருத்தி, பிரார்த்தனை செய்ய வரும் பெண்களை புகைப்படம் எடுத்து
அதனை மார்பிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் அந்த பாதிரியார் மீது வன்முறையால் பெண்களை மானபங்கப்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளார்கள்.