முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் குமார் ரெட்டி இன்று(ஏப் 7) பாஜகவில் இணைந்தார்,
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி நேற்று பாஜகவில் சேர்ந்ததை அடுத்து, தென் இந்தியாவின் இன்னொரு மிக பெரும் தலைவர் பாஜகவில் இணைந்திருக்கிறார்.
2014இல் தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்பு பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதலமைச்சராகப் பணியாற்றிய கிரண் ரெட்டி, கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடு காரணமாக மார்ச் 2023 இல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்தியா
இதற்கு முன்பும் ஒருமுறை அவர் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்
ஆந்திராவில் ஆளும் YSR காங்கிரஸுக்கும், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கிரண் ரெட்டி பாஜகவில் சேரும் முடிவை எடுத்துள்ளார்.
அவரது இந்த முடிவு ஆந்திர மாநிலத்தில் காலடி எடுத்து வைக்க காத்திருக்கும் பாஜகவுக்கு சாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறது.
62 வயதான கிரண் ரெட்டி, ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, 2014 ஆம் ஆண்டில் இதற்கு முன் ஒருமுறை காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
அதன் பிறகு, 'ஜெய் சமைக்யந்திரா' என்ற கட்சியைத் தொடங்கினார்.
ஆனால், அவரால் 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.
அதனையடுத்து, அவர் மீண்டும் காங்கிரஸில் 2018ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆனால், அதன்பின், அவர் அதிகமாக அரசியலில் செயல்படவில்லை.