
தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் 15ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்க 2 தேதிகள் முடிவு செய்யப்பட்டது.
தற்போது ஜூன் 7 ஆம் தேதி, ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 26, 2023
ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்#TNSchools #AnbilMaheshPoyyamozhi #News18TamilNadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/0QDTrVIzXt