NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: தமிழகத்தில் பாஜக தோல்விக்கு பிறகு அண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: தமிழகத்தில் பாஜக தோல்விக்கு பிறகு அண்ணாமலை
    தமிழகத்தில் பாஜக பல இடங்களில் இரண்டாம் இடத்தினை பிடித்தது

    2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: தமிழகத்தில் பாஜக தோல்விக்கு பிறகு அண்ணாமலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 05, 2024
    07:08 pm

    செய்தி முன்னோட்டம்

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில கூட வெற்றி அடையவில்லை. எனினும் பல இடங்களில் இரண்டாம் இடத்தினை பிடித்தது.

    அதேபோல, கோவையில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தோல்வியை தழுவினார்.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,"தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டிலிருந்து NDA கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. அதை அடைய முடியவில்லை என்பது வருத்தம்" என்று கூறியுள்ளார்.

    "2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது தான் எங்களின் இலக்கு. 2026-ல் தமிழக அரசியலில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமையும். நிச்சயம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடக்கும்" என்று உறுதிபட தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அண்ணாமலை பேட்டி

    “2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை இப்போதும் உள்ளது” - அண்ணாமலை பேட்டி!

    விவரம் : https://t.co/H9oFrBDE7A#Annamalai | #BJP | #NDA | #NDAAlliance | #Elections2024 | #LokSabhaElections2024 | #ElectionsWithNews7tamil | #News7Tamil | #News7TamilUpdates

    — News7 Tamil (@news7tamil) June 5, 2024

    சீமானை பாராட்டிய அண்ணாமலை

    நேர்மையாக தேர்தலில் போட்டியிட்டார் என சீமானை பாராட்டிய அண்ணாமலை

    பாஜக தனித்து பெற்ற வாக்குகள், நாம் தமிழரை விட அதிகமாக இருந்தால், ஆட்சியை கலைத்து விடுவேன் என சீமான் கூறியதை பற்றி அண்ணாமலையிடம் கேட்டபோது, "நாம் தமிழர் கட்சியை இந்த தருணத்தில் பாராட்டுகிறேன். எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியல் சித்தாந்த ரீதியாக கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றாலும், நேர்மையாக இந்த காலத்தில் அவர்கள் நின்றுள்ளார்கள்" என்றார்.

    "பணம் கொடுக்காமல் தேர்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். ஒரு அடிப்படை கட்டமைப்பு இல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்கள்" என்றும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அண்ணாமலை
    பாஜக

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்

    அண்ணாமலை

    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்  எடப்பாடி கே பழனிசாமி
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக

    பாஜக

    தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி? தேர்தல்
    போராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா கர்நாடகா
    சொத்துப் பங்கீடு தொடர்பான சாம் பிட்ரோடாவின் கருத்து: காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ்
     அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025