அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட நிலையில் நெல்லை மாவட்டம் களகாடு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோவில்பட்டி அருகே யானையின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து வனத்துறையினர் குளிர்வித்தனர். வழி இடையே யானை, காலில் கட்டபட்டிருந்த சங்கிலியை அவிழ்ததால் பதற்றம் நிலவியது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீண்டும் அவிழாத வண்ணம் பொறுத்தினர். யானை செல்லும் வாகனத்திற்கு முன்னரும் பின்னரும், பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. தும்பிக்கை மற்றும் உடலின் பல பகுதிகளிலும் யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சை அளித்த பின் வனப்பகுதியில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.