Page Loader
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு சிபிசிஐடி விசாரணை

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை

எழுதியவர் Nivetha P
Feb 25, 2023
03:47 pm

செய்தி முன்னோட்டம்

விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது. அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமை செய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளார் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்த விசாரணை தற்போது சிபிசிஐடி போலீசாரால் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20 பேர்களால் கையாளப்படுகிறது. இதன் உரிமையாளர் ஜூபின் பேபி, அவரது மனைவி உள்பட 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி அளிக்கக்கோரி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இது குறித்த விசாரணை இன்று நடந்தது. இதற்கிடையே அந்த ஆசிரமத்தில் இருந்த 6 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

7 பேர் கொண்ட குழு

பெங்களூர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்தில் விசாரணை

அதன்படி அதில் சத்யமங்கள பகுதியை சேர்ந்த ஜாபருல்லா, தென்காசியை சேர்ந்த லட்சுமி அம்மாள், அவரது மகன் முத்து விநாயகம் ஆகியோர் புகைப்படங்களை விழுப்புரம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, கடலூர் என தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பொதுமக்கள் பார்வையில் படும்படி ஆங்காங்கே வெளியிட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஜூபின் பேபியிடம் விசாரணை நடத்தியதில் பெங்களூரில் தனது நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உள்பட 53பேரை அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார். அதில் ஜாபருல்லா உள்பட 16பேர் மட்டும் மாயமாகிபோனது தெரியவந்துள்ளது. இதனால் 7பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் குழு பெங்களூர் சென்று ஆட்டோ ராஜா ஆசிரமத்திலும் விசாரணை நடத்தினார்கள் என்று கூறப்படுகிறது.