Loading...
அன்பில் மகேஷ் ஜாமீன் மனு நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: புழல் சிறையில் அவருக்கு வழங்கப்படும் வசதிகள் என்ன?
அன்பில் மகேஷ் ஜாமீன் மனு நவம்பர் 2 தேதிக்கு ஒத்திவைப்பு

அன்பில் மகேஷ் ஜாமீன் மனு நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: புழல் சிறையில் அவருக்கு வழங்கப்படும் வசதிகள் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2026
12:04 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதன் காரணமாக அவர் மேலும் சில நாட்கள் புழல் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனக்கு கணையப் பாதிப்பு உள்ளதால் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங் வேண்டுமென அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். வியாழக்கிழமை காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்த இம்மனுவை நீதிபதிகள் திங்கள்கிழமைக்கு (நவம்பர் 2) ஒத்திவைத்தனர்.

வசதிகள்

புழல் சிறையில் முதல் வகுப்பு வசதிகள்

நீதிமன்றக் காவல் கைதியாக புழல் மத்திய சிறையின் முதல் வகுப்புப் பிரிவில் தனி அறையில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, மின்விசிறி மற்றும் தனி கழிப்பறை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வழக்கமான சிறை ஆடைக்கு பதிலாக சாதாரண உடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி எண்ணெய் இல்லாத உணவு, சாதம், ரசம் மற்றும் வேகவைத்த காய்கறிகள் வழங்கப்படுகின்றன.

முதல் வகுப்பு கைதி என்பதால் வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி குழம்பும் வழங்கப்படுகிறது.

சிறையில் மின்விசிறி மற்றும் கொசு விரட்டி வழங்கப்பட்டுள்ள போதிலும், AC வசதி இல்லாததால் அன்பில் மகேஷ் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT