Page Loader
'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
May 22, 2025
04:50 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். மொத்தம் ரூ.24,470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 'அம்ரித் பாரத்' திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 103 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. தமிழகத்தில் திறக்கப்பட்ட ரயில் நிலையங்கள்: பரங்கிமலை ஸ்ரீரங்கம் போளூர் திருவண்ணாமலை விருதாச்சலம் சாமல்பட்டி குழித்துறை சிதம்பரம் மன்னார்குடி

வசதிகள்

ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் 

இந்த புதிய நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக நவீன நுழைவு வாயில்கள், நடை மேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட், கூடுதல் நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாட்டு பணிகளுடன், தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான ஆந்திராவின் சூலூர்பேட்டை, கேரளாவின் 3 ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மொத்தம் 13 ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இது தவிர பிற மாநிலங்களில் மேம்படுத்தப்பட்ட நிலையங்கள்: உத்தரப்பிரதேசம்-19 குஜராத்-18 மகாராஷ்டிரா-15 மத்தியப் பிரதேசம் - 6 கர்நாடகா - 5 சத்தீஸ்கர் - 5 பீகார் - 2 கேரளா - 2 உள்ளிட்ட பல மாநிலங்களில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்தார்.