
அமெரிக்கா நாட்டின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் எப்.பி.ஐ. என கூறப்படும் மத்திய விசாரணை அமைப்பின் சர்வதேச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குனரான ரேமண்ட் டுடா இன்று(ஏப்ரல்.,18) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
இவரது வருகை குறித்து, அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், சர்வதேச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குனரான ரேமண்ட் டுடா அவர்களை புதுடெல்லிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி.
அவரது இந்த பயணத்தின் மூலம் இந்திய சட்ட அமலாக்க முகைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எப்.பி.ஐ.யின் ஒத்துழைப்பை மேம்படுத்துவார்.
சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு ரேமண்ட் டுடா எப்.பி.ஐ. பணியில் சிறப்பு அதிகாரியாக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அமெரிக்காவின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை; இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு#America #Indiahttps://t.co/3hnd2bMlu6
— DailyThanthi (@dinathanthi) April 18, 2023