சென்னைக்கு பிரதமர் மோடி வருகை: போக்குவரத்துக்கான மாற்றுவழித் தடங்கள் அறிவிப்பு
நாளை பிரதமர் மோடி சென்னைக்கு வரவுள்ளார். கேலோ இந்தியா விளையாட்டு தொடருக்கான தொடக்க விழா உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதன் காரணமாக விழாக்கள் நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை போக்குவரத்து மாற்றப்படுகிறது. குறிப்பாக பிற்பகல் 3 மணி-இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால் வணிக வாகனங்களுக்கான மாற்று வழிதடங்களையும் வெளியிட்டுள்ளது சென்னை போக்குவரத்து துறை. மேலும் இந்த குறிப்பிட்ட நேரத்தில், வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து, மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.