
ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து குற்றவியல் வழக்குகளும், ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, போராட்டக் காலத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அதே இடங்களில் பணியமர்த்தப்படவும், வேலைநிறுத்தம் காரணமாக அவர்கள் பதவி உயர்வில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளையும் சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு நிலுவை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
போராட்டம்
போராட்டத்தின் பின்னணி
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதனையடுத்து, பல ஆசிரியர்கள் மீது ஊதியக் பிடித்தம், இடமாற்றம் மற்றும் குற்றவியல் வழக்குகள் பதிக்கப்பட்டன. திமுக ஆட்சி அமைந்தபின், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மீள்உதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இப்போது, அந்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகவல், நீண்ட நாள் இழப்பீடுகளும் தடைகளும் சந்தித்த வந்த ஆசிரியர்களுக்கு மிகுந்த நிம்மதியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.