Page Loader
சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு
சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு

எழுதியவர் Nivetha P
Feb 08, 2023
07:41 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை விமான நிலையத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 பழைய விமானங்களை அகற்ற தனியார் நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அகற்றும் பணி மேற்கொள்வதோடு வரும் பிப்ரவரி 10ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, VT-KAE(MSN-737), VT-KAF(MSN-738), VT-DKA(MSN-738), VT-DKA(MSN-718)-M-ABFI ஆகிய 3 பதிவு நீக்கம் செய்யப்பட்ட விமானங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே சென்னை விமான நிலையத்தில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கைவிடப்பட்ட விமானங்களை தற்போதைய உரிமையாளர்கள் பொருந்தக்கூடிய அனைத்து நிலுவை தொகைகளையும் செலுத்தி அவற்றை வரும் 10ம் தேதியன்று அல்லது அதற்கு முன்பாகவோ சென்னை விமான நிலையத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அகற்ற உத்தரவு

விமான நிலைய இயக்குநரின் அலுவலகத்திற்கு உரிமையாளர்கள் விசாரணைக்கு வர உத்தரவு

மேலும் இதனை தொடர்ந்து, ஏஏஐ சட்டம் 1994ன் கீழ் மேற்கூறப்பட்டுள்ள 3 விமானங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை வரும் 10ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும். விமான நிலைய இயக்குநரின் அலுவலகத்திற்கு உரிமையாளர்கள் விசாரணைக்கு வருமாறும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி இல்லையெனில் நடவடிக்கைகள் எக்ஸ்-பார்ட்டாக நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். பயன்பாட்டில் இல்லாத இந்த 3 பழைய விமானங்களில் பறவைகள் கூடுகட்டி வசித்து வருவதால் விமான போக்குவரத்துக்கு பறவைகள் மூலம் ஆபத்து நேரிட வாய்ப்புகள் உள்ளது. இதனால் தான் இந்த 3 பழைய விமானங்களை உடனே விமான நிலையத்தில் இருந்து அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.