
டெல்லி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய 2 இந்திய பயணிகள் கைது
செய்தி முன்னோட்டம்
டெல்லி - வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரிடமும் விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கஞ்சா கடத்தல், சட்டவிரோதமாக மதிப்புள்ள பொருட்களை கடத்தல், தங்க கடத்தல் போன்ற குற்றங்களை கண்டறியவே இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் இருந்த 2 இந்திய பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளார்கள்.
அவர்கள் மீது சந்தேகம் உண்டானதால், தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர்கள் உள்ளாடையில் மறைத்து வைத்து கொண்டுவந்த 3.85 கிலோ எடைகொண்ட ரூ.1.95 கோடி மதிப்புள்ள தங்க பேஸ்ட் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்களிடம் சுங்கத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
உள்ளாடையில் மறைத்து கொண்டுவந்த ரூ.1.95 கோடி மதிப்புள்ள தங்கபேஸ்ட் கண்டறியப்பட்டது
Customs Dept at Delhi's IGI airport arrested 2 Indian passengers, who arrived from Dubai, after approx 4.5 kg of gold paste was recovered from their undergarments, leading to the recovery of 3.85 kg of pure gold valued at 1.95 Cr. Further investigations are underway: Customs pic.twitter.com/SwC1HqNpo3
— ANI (@ANI) February 7, 2023