Page Loader
டெல்லி ஏர் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம்
டெல்லி ஏர் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம்

டெல்லி ஏர் விஸ்தாரா விமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம்

எழுதியவர் Nivetha P
Feb 06, 2023
09:22 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி - நாட்டின் வடகிழக்கு பகுதிகளுக்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் இயக்கப்படாத காரணத்தினால் ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, அபராத தொகையினை செலுத்துமாறு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து டிஜிசிஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏப்ரல் 2022ம் ஆண்டில் விதிகளை கடைபிடிக்காததால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டு, அந்நிறுவனத்தால் செலுத்தப்பட்டது" என்று கூறினார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விஸ்தாரா நிறுவன செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக ஆர்டிஜி உடன் விஸ்தாரா இணக்கமாக உள்ளது என்று கூறினார்.

தொடரும் அபராதங்கள்

ஏப்ரல் 2022ல் தேவைப்பட்ட விமானங்களில் 0.01 சதவிகிதம் பற்றாக்குறை

மேலும், பாக்டோக்ரா விமான நிலையம் மூடப்படாததால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏப்ரல் 2022ல் தேவைப்பட்ட விமானங்களில் 0.01 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, 2017-18ம் ஆண்டு வடக்கு குளிர்காலத்தில் இருந்து நடைமுறைக்கு வந்த புதிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை 2016ன்படி ஏஎஸ்கேஎம்'களின் வர்த்தகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கடைசி நிமிட மாற்றங்களை செய்வதற்கான வழிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்கும் வகையில் விஸ்தாரா நிறுவனம் அபராதத்தை செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமான நிறுவனங்கள் சிக்கலில் சிக்கி வருவதோடு அபராதங்களையும் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.