Loading...
ஏர் இந்தியா விமானிகள் இருவருக்கு போதைப்பொருள் சோதனை: தொடர் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஏர் இந்தியா விமானிகள் இருவருக்கு போதைப்பொருள் சோதனை

ஏர் இந்தியா விமானிகள் இருவருக்கு போதைப்பொருள் சோதனை: தொடர் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 17, 2026
02:25 pm

செய்தி முன்னோட்டம்

ஏர் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமான முடிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, அவர்களின் மாதிரிகள் இறுதி மற்றும் விரிவான ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்க வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி பூக்கெட்டிலிருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா (AI2379) விமானம் நடுவானில் பறந்தபோது, திடீரென 300 அடி உயரத்திலிருந்து கீழே சரிந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அப்போதைய முதன்மை விமானி கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவத்தின் எதிரொலியாகவே அனைத்து விமானிகளுக்கும் இத்தகைய சோதனையை ஏர் இந்தியா கட்டாயமாக்கியது.

பரிசோதனை

ஏர் இந்தியாவின் தீவிர பரிசோதனை நடவடிக்கை

ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அமைப்பை சேர்ந்த அனைத்துப் பணிநிலை விமானிகளுக்கும் போதைப்பொருள் சோதனையை நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுவரை சுமார் 300 முதல் 400 விமானிகளுக்கு பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த இரு விமானிகளின் மாதிரிகள் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ஆரம்பக்கட்ட முடிவுகள் மட்டுமே வெளியான நிலையில், இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது என்றும், அடுத்தகட்ட பரிசோதனை முடிவே இதைத் தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், பூக்கெட் விமானத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் கோளாறு மற்றும் 'ஆட்டோ பைலட்' துண்டிப்பு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்தும் விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) தனியாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT