Loading...
தாய்லாந்தில் சட்டப்பூர்வமானாலும் பைலட்டுக்குத் தடை: ஏர் இந்தியா பைலட் விவகாரத்தில் போதைப்பொருள் பரிசோதனை விதிகள் சொல்வது என்ன?
இந்திய விமான பணியாளர்களுக்கு கஞ்சா பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது

தாய்லாந்தில் சட்டப்பூர்வமானாலும் பைலட்டுக்குத் தடை: ஏர் இந்தியா பைலட் விவகாரத்தில் போதைப்பொருள் பரிசோதனை விதிகள் சொல்வது என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
05:34 pm

செய்தி முன்னோட்டம்

தாய்லாந்தில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், விமானத்தின் தலைமை பைலட்டுக்கு கஞ்சா (Marijuana) பயன்படுத்தியதற்கான முடிவுகள் 'பாசிட்டிவ்' என வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து போன்ற நாடுகளில் கஞ்சா பயன்பாடு பொதுமக்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இந்திய விமான பணியாளர்களுக்கு அது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள உளவியல் ரீதியான போதைப்பொருட்கள் பயன்பாட்டு விதிகள் (CAR) சர்வதேச அளவில் பயணிக்கும் இந்திய விமானிகளுக்கும் பொருந்தும். எனவே, வெளிநாட்டில் பயன்படுத்தினாலும் விமானியின் உரிமம் ரத்து செய்யப்படலாம்.

பரிசோதனை முறைகள்

DGCA-வின் போதைப்பொருள் பரிசோதனை முறைகள்

இந்தியாவில் விமானிகளுக்கு மதுபோதை கண்டறிய பயன்படும் 'மூச்சுப் காற்று பரிசோதனை' போன்று கஞ்சா பயன்பாட்டை கண்டறிய சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதில் முதற்கட்ட சோதனையில் போதைப்பொருள் இருப்பது உறுதியானால், உடனடியாக அவர் விமானப் பணியில் இருந்து நீக்கப்பட்டு, துல்லியமான காஸ் குரோமடோகிராபி (GC/MS) போன்ற உயர்மட்ட ஆய்வகச் சோதனைக்கு அனுப்பப்படுவார்.

வித்தியாசம்

ஆல்கஹால் மற்றும் கஞ்சா பரிசோதனைக்கு இடையேயான வித்தியாசம்

ஆல்கஹால் குடித்திருப்பதை மூச்சுப் பரிசோதனை மூலம் உடனடியாக கண்டறிந்து, அது எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய முடியும்.

ஆனால் கஞ்சா (THC) பயன்பாடு உடலின் கொழுப்புப் பகுதியில் சேமிக்கப்படுவதால், பயன்பாட்டிற்கு பிறகும் சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை பரிசோதனையில் பாசிட்டிவ் என வரும்.

எனவே, சிறுநீர் பரிசோதனை மூலம் கஞ்சா பயன்படுத்தியதை உறுதி செய்ய முடியுமே தவிர, விமானத்தை ஓட்டும் போது அவர் போதையில் இருந்தாரா என்பதை மட்டுமே வைத்து தீர்மானிக்க முடியாது.

ADVERTISEMENT

தண்டனைகள்

விதிகளை மீறும் பைலட்டுகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள்

DGCA விதிகளின்படி, போதைப்பொருள் பரிசோதனையில் முதன்முறை பாசிட்டிவ் என வந்தால், அவர்கள் மறுவாழ்வு மற்றும் போதை மீட்புப் பயிற்சிக்கு அனுப்பப்படுவர்.

பயிற்சிக்கு பின் தகுதிச் சான்றிதழ் பெற்றே மீண்டும் பணியில் சேர முடியும்.

இரண்டாவது முறை பிடிபட்டால் 3 ஆண்டுகள் உரிமம் இடைநீக்கம் செய்யப்படும்.

மூன்றாவது முறையும் மீறினால் விமானி உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

ADVERTISEMENT