இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்
கோழிக்கோடு கிளம்பிய ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(DGCA) தெரிவித்துள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமான நிறுவனம் இன்று(பிப் 3) தெரிவித்தாக, ANI செய்தி நிறுவனம் கூறியுள்ளது. சம்பவத்தின் போது, ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 184 பயணிகள் இருந்ததாக DGCA தெரிவித்துள்ளது. இந்திய விமானங்களில் தொடர்ந்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பட்டியலில் தற்போது இந்த சம்பவமும் சேர்க்கப்பட்டுள்ளது. முக்கியமாக, நவம்பர் மாதம் ஏர்-இந்தியா விமானத்தில் குடிபோதையில் மும்பையைச் சேர்ந்த ஷங்கர்மிஸ்ரா என்ற நபர் வயதான சகபயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகவும் குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு
"புறப்பட்டு 1,000 அடி உயரத்தில், ஒரு இன்ஜினில் தீப்பிடித்ததைக் கண்டறிந்த கேப்டன், மீண்டும் அபுதாபி விமான நிலையத்திற்குச் செல்ல முடிவு செய்தார்" என்று விமான அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்துள்ளார். பின்னர், ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800 விமானம் யு-டர்ன் செய்து மீண்டும் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்று இந்தியாவின் சிவில் ஏவியேஷன் ரெகுலேட்டரும் தெரிவித்திருக்கிறார். ஜனவரி 23அன்று திருவனந்தபுரம்-மஸ்கட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் புறப்பட்ட 45 நிமிடங்களில் தரையிறங்கிய சம்பவம் நடந்த சில வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் இதே விமான நிறுவனத்தின் துபாய் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.