
பாஜகவில் இணைந்த தமிழக மாஜி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்
செய்தி முன்னோட்டம்
அதிமுக - பாஜக கூட்டணி பிளவுபட்டதை அடுத்து, பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு பற்றி பலரும் யோசித்துக்கொண்டிருக்க, அண்ணாமலை தலைமையில் இன்று 18 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இவர்கள் பெரும்பான்மையினர் அதிமுக கட்சியினர் என்பது கூடுதல் செய்தி.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரது முன்னிலையில், இவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
முன்னதாக, அதிமுகவுக்கான கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ள நேரத்தில், இது போன்றதொரு கட்சி தாவல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில், காங்கிரஸ், தேமுதிக மற்றும் திமுகவிலிருந்தும் ஒரு சிலர் பாஜகவிற்கு தாவியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
பாஜகவில் இணைந்த மாஜி MLA-க்கள்
டெல்லியில் பாஜகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
— Niranjan kumar (@niranjan2428) February 7, 2024
முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் உட்பட 17 அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்
காங்கிரஸில் இருந்து ஒரு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திமுகவிலிருந்து ஒரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்… pic.twitter.com/u8v3mnLRuZ