பாமக-தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக; உருவாகிறதா மூன்றாவது அணி?
செய்தி முன்னோட்டம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்று கூட்டணி அமைக்கும் முயற்சியில் தாங்கள் விருப்பப்படும் தொகுதிகள் எத்தனை என்பதையும், எதிர்ப்பார்ப்புகள் என்ன என்பதை பற்றியும் பாமக மற்றும் தேமுதிகவிடம், அதிமுக தலைமை கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டபின், அதிமுகவின் நகர்வு எப்படி இருக்கும் என பலரும் யோசித்த நிலையில், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
மறுபுறம், பாஜக தலைமையும், பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டு சேர முயற்சித்து வருகிறது.
இது குறித்து நேற்று பாமக சார்பில் வெளியான தகவல் படி, தற்போது கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்பட்டது.
பாஜகவிலிருந்து பிரிந்த பின்னர், தன்னுடைய வெற்றியை எப்பாடுபட்டாவது நிலைநாட்டவேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக
#BREAKING || அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவை
— தெத்திகிரிப்பட்டி சக்தி (@SAKTHIS77505695) January 31, 2024
சார்ந்த நிர்வாகிகள் பாமக,
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை#AIADMK #PMK #dmdk@AIADMKITWINGOFL @AIADMKOfficial @ElangovanAiadmk @satyenaiadmk pic.twitter.com/IFG1yug4Od