LOADING...
சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கரை கட்சியை விட்டு நீக்கிய EPS; தவெக-விற்கு ஆதரவு அளித்ததால் பரபரப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கரை கட்சியை விட்டு நீக்கிய EPS; தவெக-விற்கு ஆதரவு அளித்ததால் பரபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
May 13, 2026
07:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியலில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. சி.வி.சண்முகம் தலைமையிலான அணி இன்று பத்திர்கையாளர்களை சந்தித்து அதிமுக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், EPS பதவி ஆசையில் இருப்பதால் திருமாவளவனை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து இந்த கட்சி நீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டு

துரோகக் குற்றச்சாட்டும் - சி.வி. சண்முகத்தின் பதிலடி

சி.வி. சண்முகம் ஈபிஎஸ்-ஐக் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்தார்: "கட்சியைப் பலப்படுத்த பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈபிஎஸ் ஏற்கவில்லை. அவர் அதிமுக-வின் அடிப்படை கொள்கைகளிலிருந்து விலகிவிட்டார்." "அதிமுக-வின் அடிப்படை நோக்கமே திமுக-வை வீழ்த்தவதுதான். 50 ஆண்டுகளாக நாங்கள் அதற்காகவே போராடுகிறோம். ஆனால் ஈபிஎஸ் மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கட்சியின் கொள்கைகளை மறந்துவிட்டார்." "நான் துரோகம் செய்யவில்லை. கட்சியின் அடிப்படைத் தொண்டர்களின் உணர்வுகளுக்குத் தான் மதிப்பளித்தேன்." எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கை, கட்சியைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் என்று ஒரு தரப்பு கருதினாலும், கொங்கு மண்டலம்(வேலுமணி) மற்றும் வடதமிழகம்(சண்முகம்) ஆகிய பகுதிகளில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement