NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியானது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியானது 

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியானது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 14, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    வருகின்ற செப்டம்பர் 18 -ஆம் தேதி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்குகிறது. எதற்காக இந்த சிறப்பு கூட்டத்தொடர் என்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்காமல் இருந்த மத்திய அரசு, நேற்று, 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின், முதல் நாளின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கடந்த 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் குறித்து சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, நாடாளுமன்றத்தின் சாதனைகள், அனுபவங்கள், நினைவலைகள் என பல்வேறு அம்சங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    card 2

    மசோதாக்கள் தாக்கல்

    இதைத்தவிர மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மசோதாக்களும் சிறப்பு கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

    முக்கியமாக, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் மாநில தேர்தல் கமிஷனர்களின் நியமனம் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மசோதாவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    அதேபோல, வக்கீல்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிகைகள் பதிவு மசோதா 2023 , தபால் அலுவலக மசோதா 2023 போன்றவை தாக்கல் செய்யப்படவுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    நாடாளுமன்றம்

    விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்; பரப்பான சூழலில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் டெல்லி
    "மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்கக்கேடு; குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள் மணிப்பூர்
    விதி எண்.176 Vs.விதி எண்.267; நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் - மத்திய அரசு இடையே மோதல்  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025