Page Loader
ரஜினி காந்த்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பின்னணி என்ன
"என் இனிய நண்பர் 'தலைவர்' ரஜினிகாந்த்தை இன்று சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.": சந்திரபாபு நாயுடு ட்வீட்

ரஜினி காந்த்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பின்னணி என்ன

எழுதியவர் Sindhuja SM
Jan 10, 2023
03:31 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரஜினி காந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு நடிகர் ரஜினி காந்த் ஐதராபாத்திலேயே தங்கியுள்ளார். இந்நிலையில், முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நேற்று அவரது வீட்டிலேயே சென்று சந்தித்த ரஜினி காந்த், அது குறித்து ட்விட்டரிலும் பதிவிட்டிருக்கிறார். "நீண்ட நாட்களுக்குப் பிறகு.. என் மதிப்பிற்குரியவரும் அருமை நண்பருமான சந்திரபாபு நாயுடு காருவை சந்தித்து, மறக்க முடியாத நேரத்தைக் கழித்தேன். அவர் நல்ல ஆரோக்கியதோடு அரசியல் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்திருக்கிறார். இது மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு என்றாலும், இந்த சந்திப்பின் போது அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவு