இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு கோவி-19 தொற்று மீண்டும் உயர துவங்கியுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கிறது. தினசரி பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளி விவரத்தினை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 843 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 800ஐ தாண்டியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. கோவிட்-19ன் உருமாறிய தொற்றுகளான XBB.1 மற்றும் XBB.1.16 ஆகியவை தீவிரமாக பரவி வருவதே இந்த திடீர் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.