
சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் பெய்த கனமழை - மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த 1996ம்ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் 28 செ.மீ.மழை பதிவாகியதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் இந்தாண்டுத்தான் ஜூன் மாதத்தில் 13.8செ.மீ., மழையானது பதிவாகியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மேலும் இந்த மழையானது தொடர்ந்து பெய்துவருவதால், மழையின் அளவானது மேலும் உயரக்கூடும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் பெய்துவரும் மழை மற்றும் அதற்கான மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், "மழையானது தொடர்ந்து பெய்துவரும் நிலையில், சென்னையில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து எடுத்து வருகிறது.
இதுவரை மழை காரணமாக உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
வருவாய்த்துறை அதிகாரிகள்மூலம் தொடர்ந்து நிலவரங்களை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சென்னையில் மழை மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்#News18TamilNadu pic.twitter.com/ey0mbwbCZ9
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 19, 2023