
புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் இன்ஃபுளூயன்சா-ஏ' என்னும் வைரஸின் துணை வைரஸான'H3N2' வகை வைரஸால் ஏரளாமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி வருகிறது.
புதுச்சேரியில் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்தது.
இந்த வைரஸ் சிறுவர்களையே அதிகம் பாதிப்பதால் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியாக மார்ச்16 முதல் 26வரை அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் பயிலும் 1 வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.
அதன்படி விடுமுறையளிக்கப்பட்ட நிலையில், தற்போது விடுமுறை காலம் முடிந்து, மூடப்பட்டப்பள்ளிகள் இன்று(மார்ச்.,27) மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கோடைகாலம் துவங்கியுள்ளதால் இறுதித்தேர்வினை முன்னதாக நடத்திமுடிக்க அம்மாநில அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
புதுச்சேரியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு#puducherry | #schoolopenshttps://t.co/BZ4gLzOSp3
— Thanthi TV (@ThanthiTV) March 27, 2023