அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை
கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளரான எம்,எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் உள்பட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது நிலுவையிலுள்ள நிலையில் வரும் 26ம்தேதி பொதுசெயலாளருக்கான தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அவசரவழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகளை மார்ச் 24ம்தேதிவரை வெளியிடவேண்டாம். தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் தேர்தலுக்கு தடைவிதிக்கக்கோரி மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரிக்க சம்மதம் தெரிவித்த நீதிபதி, மற்ற நிலுவை வழக்குகளோடு இணைத்து இந்தவழக்கினை நாளை மறுநாள் விசாரிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.