
அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு
செய்தி முன்னோட்டம்
அதிமுக பொது செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று(மார்ச்.,18) துவங்கியது.
இதனையடுத்து தற்போதைய அதிமுக இடைக்கால பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடப்பதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதன் படி, இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது.
தற்போது இந்த அவசர வழக்கானது நாளை(மார்ச்.,18) காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்#ADMK #OPannerselvam #MadrasHighCourt #ADMKGeneralSecretary #ADMKGeneralSecetaryElection https://t.co/8bjbNhKYxl
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 18, 2023