Page Loader
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு

எழுதியவர் Nivetha P
Mar 27, 2023
07:34 pm

செய்தி முன்னோட்டம்

கடந்தாண்டு ஜூலைமாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அளித்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தற்போது பொதுக்குழுத்தேர்தல் நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு பதிவுசெய்தார். அந்த வழக்கையும் சேர்த்து பிரதான வழக்குகளோடு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் குறித்த விசாரணை அண்மையில் நடந்தது. அப்பொழுது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பின்தேதியினை குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து தொடரப்பட்ட வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இதன் தீர்ப்பானது நாளை(மார்ச்.,28) 10.30மணியளவில் வழங்கப்படவுள்ளது என்று நீதிபதி குமரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு