
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு
செய்தி முன்னோட்டம்
கடந்தாண்டு ஜூலை மாதம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும்,
கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அளித்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தற்போது பொதுக்குழுத்தேர்தல் நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு பதிவுசெய்தார்.
அந்த வழக்கையும் சேர்த்து பிரதான வழக்குகளோடு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த வழக்கு நாளை(மார்ச்.,22) விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கான தீர்ப்பு நிச்சயம் மார்ச் 24ம் தேதி அளிக்கப்படும் எனவே அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தான் சாதகமாக அமையும் என்று பல அரசியல் தரப்புகள் கூறிவருகிறது.
நீதிமன்ற தீர்ப்பு
எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவாளர்கள்
தீர்ப்பானது இரண்டே முறையில்தான் அமையும் ஒன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அல்லது ஓபிஎஸ்'க்கு ஆதரவாக அளிக்கப்படவேண்டும்.
எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கையும் செல்லும்.
இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் நியமிக்கப்பட்டதும் செல்லுபடியாகும்.
6 மாதக்காலம் தான் பதவி என்றாலும், பொதுக்குழு தேர்தல்முடிவுகள் தயாராகவுள்ளது.
எடப்பாடிக்கு அதிகாரபூர்வமாக அனைத்து அதிகாரமும் வந்துவிடும்.
அதுவே ஓபிஎஸ்'க்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால் அவர் மீண்டும் பொதுக்குழுக்கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டும்.
அதற்கு அவருக்கு ஆதரவுகள் கிடைக்க வேண்டும்.
எடப்பாடி பக்கம் தான் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உள்ளனர்.
இவ்வாறு எப்படி பார்த்தாலும் ஈபிஎஸ்'க்கு தான் சாதகமாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.