
கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டி - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி துவங்கியது.
நாளையோடு(ஏப்ரல்.,20) வேட்புமனுத்தாக்கல் நிறைவடையவுள்ளது.
வரும் 24ம் தேதி இதன் மீதான பரிசீலனைகள் நடந்து அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் ஆளுங்கட்சி பாஜக'வுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே நேரடியாக கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் தமிழ் மக்கள் அதிகமுள்ள தொகுதியில் அதிமுக போட்டியிடலாம் என்னும் தகவல் வெளியானது.
அதன்படி தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் அதிமுக வேட்பாளரை அறிவித்துள்ளார் எடப்பாடி கே பழனிச்சாமி.
அதிமுக
பாஜக மீது அதிருப்தியில் உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி
இது குறித்து அதிகாரபூர்வ அறிக்கையினை எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதில், அதிமுக ஆட்சிமன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.
இத்தேர்தலில் போட்டியிட விரும்பிய அதிமுக தங்கள் விருப்பத்தினை கூட்டணி கட்சியான பாஜக'விடம் தெரிவித்தது.
ஆனால் பாஜக வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் அதில் அதிமுக வேட்பாளருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால் பாஜக மீது எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.