Page Loader
அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை 
அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை

அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை 

எழுதியவர் Nivetha P
Apr 12, 2023
10:44 am

செய்தி முன்னோட்டம்

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 28ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதி அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கின் இறுதி வாதம் ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் நடக்கவிருந்தது. ஆனால் வரும் 16ம்தேதி அதிமுக செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் முகமது சபீக் மற்றும் மகாதேவன் இன்றே(ஏப்ரல்.,12) இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post