சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்
சென்னையில் புதிய பன்னாட்டு விமான நிலையமானது நவீன வசதிகளோடு ரூ.1,260கோடி முதலீட்டில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை கடந்த ஏப்ரல் மாதம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு 100 பயணிகள் பாதுகாப்பு கவுண்டர்கள், 17 லிப்ட்கள்,17நகரும் படிக்கெட்டுகள், பயண உடைமைகள் வரும் 6 கன்வேயர் பெல்ட்டுக்கள், 108 குடியுரிமை கவுண்டர்கள் என அதிநவீன வசதிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடியுரிமை சோதனைகளை முடித்துக்கொண்ட பின்னர் தனது ட்விட்டர் எக்ஸ் பதிவில்,"சர்வதேச முனையத்தில் அமைதியான முறையில் குடியுரிமை சோதனை முடிந்தது. விமானநிலைய உள்கட்டமைப்புகளும் சிறப்பாக உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.