Loading...
மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
நடிகர் டைகர் ஷெராஃப்-ஐ நேரில் சந்தித்தார் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
08:28 am

செய்தி முன்னோட்டம்

மும்பையின் ஜுஹு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தனியார் நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டுத் திரும்பிய பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் பயணித்த கார் மீது மூன்று மர்ம நபர்கள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜுஹு பகுதியில் உள்ள புஷ்பா பார்க் அருகில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், நடிகர் டைகர் ஷெராப் எந்தவித காயமும்மின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். எனினும், இத்துப்பாக்கிச் சூட்டில் அவரது கார் ஓட்டுநர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் டைகர் ஷெராப் லேசான கீறல் காயங்களுடன் உயிர் தப்பியதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

விசாரணை

மும்பை காவல்துறை தீவிர விசாரணை மற்றும் 15 தனிப்படைகள் அமைப்பு

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் விரைந்து செயல்பட்ட மும்பை காவல்துறை, குற்றவாளிகளைக் கைது செய்யக் குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல் துறையினரைக் கொண்டு 15 தனிப்படைகளை அமைத்துள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், சம்பவ இடத்தில் பதிவான தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவர் சந்தேகத்தின் பேரில் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பேற்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

இத்தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் சமூக வலைதளம் மூலமாக பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் பிரபலங்களை எச்சரிக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் குறித்துக் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் நடிகர் டைகர் ஷெராப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளதோடு, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.

ADVERTISEMENT