Loading...
கடைசி நொடியில் ஜாம் ஆன துப்பாக்கி; நடிகர் டைகர் ஷெராப் நூலிழையில் உயிர் தப்பியது எப்படி?
டைகர் ஷெராப் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் துப்பாக்கி கடைசி நேரத்தில் ஜாம் ஆனதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தகவல்

கடைசி நொடியில் ஜாம் ஆன துப்பாக்கி; நடிகர் டைகர் ஷெராப் நூலிழையில் உயிர் தப்பியது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
11:54 am

செய்தி முன்னோட்டம்

மும்பையின் ஜுஹு பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதல்தாரியின் நாட்டுத் துப்பாக்கி கடைசி நேரத்தில் ஜாம் ஆனதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் ஜுஹு பகுதியில் உள்ள புஷ்பா நர்சி பூங்காவிற்கு டைகர் ஷெராப் கால்பந்து விளையாட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனை முன்கூட்டியே நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல், பூங்காவின் வாயிலில் சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்து தாக்குதலை நடத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு

7 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு

டைகர் ஷெராப் விளையாட்டை முடித்துவிட்டு தனது காரில் புறப்பட்ட போது, மர்ம நபர்கள் 7 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 5 தோட்டாக்கள் காரின் மீது பட்டன.

காரின் அருகில் வந்த ஒரு தாக்குதல்தாரி, டைகர் ஷெராப்பை மிக அருகில் வைத்துச் சுட முயன்ற போது அவனது நாட்டுத் துப்பாக்கி செயல்படாமல் பழுதானது.

இருமுறை முயற்சித்தும் துப்பாக்கி இயங்காததால் நடிகர் நூலிழையில் காயமின்றித் தப்பினார்.

தேடுதல் வேட்டை

ஓட்டுநருக்கு காயம் மற்றும் காவல்துறையின் தேடுதல் வேட்டை

இத்தாக்குதலில் டைகர் ஷெராப்பின் கார் ஓட்டுநர் ஃபிர்தௌஸுக்கு இடது கையில் துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட்டது.

அவர் உடனடியாக நராவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலுக்குப் பிறகு சலசலப்பை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தில் தப்பிய குற்றவாளிகள், அந்தேரி ரயில் நிலையத்திற்கு அருகில் வாகனத்தை கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

குற்றவாளிகளை கண்டறிய சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் மும்பை காவல்துறை, 15 சிறப்புத் தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை முடக்கிவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் சார்பில் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுப் பதிவிட்டுள்ளனர்.

சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த விவகாரம் குறித்து மும்பை குற்றப்பிரிவு காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT