'காலம் கடந்த விருது': நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது
செய்தி முன்னோட்டம்
பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது மத்திய அரசால் வியாழக்கிழமை(ஜனவரி 25) வழங்கப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28-2023ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இந்நிலையில், அவருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.
பத்ம விருதுகள் பெற்ற பிரபலங்களின் பட்டியலில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, வைஜெயந்திமாலா, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத் துறையில் அவரது பங்களிப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மிகவும் காலம் கடந்த விருது - பிரேமலதா விஜயகாந்த்
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 26, 2024
மிகவும் காலம் கடந்த விருது - பிரேமலதா விஜயகாந்த் #Premalatha #Vijayakanth #DMDK #padmabhushan #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/Q57fPCbRDa