சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 3 ஆம்னி பேருந்துகள் பயங்கர விபத்து
செய்தி முன்னோட்டம்
சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒன்றன்பின் ஒன்றாக சென்ற 3 ஆம்னி பேருந்துகள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
விருத்தாசலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் இன்று காலை நடந்த இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் உட்பட 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதிகாலையில் வேப்பூர் மேம்பாலத்தில் ஆம்னி பேருந்தை நிறுத்தியபோது, அதிவேகத்தில் பின்னால் வந்த 2 பேருந்துகள் அடுத்தடுத்து மோதியது இந்த விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உடனே விரைந்த காவல்துறையினர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | 3 ஆம்னி பேருந்துகள் விபத்து - 35 பேர் படுகாயம்#SunNews | #OmniBus | #Viruthachalam | #BusAccident pic.twitter.com/tB7qiFTdMP
— Sun News (@sunnewstamil) February 26, 2025