Page Loader
மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு
மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு

மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு

எழுதியவர் Nivetha P
Apr 08, 2023
02:05 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பிரதேச மாநில அரசு, ரூ.53,000 சம்பளம் வாங்கும் நபருக்கு ரூ.113 கோடி வரி விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிண்டு நகரை சேர்ந்தவர் ரவி குப்தா. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு மாதம் ரூ.53,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு வருமான வரித்துறையின் இருந்து நோட்டீஸ் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் ரவி குப்தாவிற்கு ரூ.113 கோடி ரூபாயினை வருமான வரியாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரவி குப்தா அதிர்ச்சியடைந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

பண பரிவர்த்தனை

2019ம் ஆண்டில் ரூ.3.5 கோடி அபராத நோட்டீஸ் வந்ததாக தகவல்

இது குறித்து அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 2011-12ம் ஆண்டு ரவி குப்தாவின் கணக்கில் ரூ.132 கோடி ரூபாய்க்கான பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான வாரியாகவே தற்போது இந்த தொகையினை வரியாக செலுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு ரவி குப்தாவிற்கு ரூ.3.5 கோடிக்கான அபராத நோட்டீஸ் வருமான வரித்துறை சார்பில் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அப்போது அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் மாதம் ரூ.7,000 சம்பளத்திற்கு பணிபுரிந்துள்ளார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.