தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள் விற்ற கும்பல் பிடிபட்டது! 10 பேர் கைது!
IFSO நிறுவனம், பிரபல நிறுவனங்கள் மூலம் போலி ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்த மோசடி கும்பலை பிடித்துள்ளது. இதில் 10 பேரை கைது செய்துள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, ஒரு தனியார் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் மேலாளர், ஐஎஃப்எஸ்ஓவிடம் புகார் அளித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. அதில் "போலி, தவறான முத்திரை மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மருந்துகள்" குறித்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் சில தெரியாத நபர்களால் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த அறியப்படாத நபர்கள் தங்களை UMPL இன் ஊழியர்களாகப் பிரதிநிதித்துவப்படுத்தி வெவ்வேறு மொபைல் எண்களில் அழைத்து, தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்பனை செய்து ஏமாற்றியுள்ளனர்.
தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகள்
2017-ம் ஆண்டு முதல் 6,372 வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்தது நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஹெல்த் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.94 கோடி மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளி ராகுல் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார் & தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். உகர்சென், சமர் சிங் மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோர் மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி அழைப்பு மையத்தை நடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட 3 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட 10 பேரை தரம் குறைந்த ஆயுர்வேத மருந்துகளுடன் கைது செய்தது. 42 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டன.