
8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா?
செய்தி முன்னோட்டம்
அதிமுக சார்பில் நேற்று இணைப்பு நிகழ்ச்சி ஒன்று சேலத்தில் நடைபெற்றது. பிற கட்சியில் இருந்தவர்கள் சிலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களைத் திமுக அரசு கிடப்பில் போட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் இருந்த போது 8 வழிசாலையை எதிர்த்த திமுக, தற்போது ஏற்று கொண்டுள்ளது.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது 8 வழிசாலைகளால் பாதிக்கப்டும் மரங்கள் மற்றும் நிலங்களுக்கு இழப்பீடு அறிவித்தோம்.
அதிமுக அரசு கொண்டு வந்தால் தவறு. திமுக அரசு கொண்டுவந்தால் சரியா?"
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம்
8 வழிச்சாலை பிரச்சனை:
சென்னையில் இருந்து சேலத்திற்கு எட்டு வழி சாலை போடும் திட்டம் அதிமுக அரசு ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சாலையைக் கட்டிமுடிக்க அதிமுக மும்முரமாக இருந்தாலும், திமுக மற்றும் பிற கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
8 வழிச்சாலை கட்டுவதால் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசயிகள் மிகவும் பாதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர்.
விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் இதை எதிர்த்து போராட்டம் செய்தனர்.
இதை எதிர்த்து போடப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதி மன்றம், 8 வழிச்சாலை கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியது.
2025ஆம் ஆண்டிற்குள் இந்த 8வழிச்சாலையை முடிக்கப்பபோவதாக மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அறிவித்தது.
தற்போது, திமுக அரசும் இதை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.