NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி
    இந்தியா

    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி

    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி
    எழுதியவர் Sindhuja SM
    Mar 15, 2023, 04:47 pm 0 நிமிட வாசிப்பு
    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி

    மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய விதிஷா ஆட்சியர் உமா சங்கர், "பரிசோதனைக்குப் பிறகு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்று கூறியுள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சிறுவனின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருக்கிறார் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சிறுவன் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மீட்பு குழு எடுத்த நடவடிக்கைகள்

    சிறுவனை வெளியே எடுக்க ஜேசிபி இயந்திரம் (மண் அள்ளும் இயந்திரம்) மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கத்தில் இன்னொரு குழி தோண்டப்பட்டது. லோகேஷ் அஹிர்வார் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​ லேடரி தாலுகாவிற்கு உட்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் கிணற்றிற்குள் விழுந்தது கிராம மக்களால் எச்சரிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டது. ஆழ்துளைக் கிணற்றில் ஆக்சிஜன் குழாய் இறக்கப்பட்டு சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்பட்டது. மீட்புப் பணியாளர்கள் இரவு நேரக் கருவி மூலம் சிக்கிய சிறுவனைக் கண்காணித்து வந்தனர். இருப்பினும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    மத்திய பிரதேசம்

    இந்தியா

    மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு டெல்லி
    குடும்பங்களுக்காக ஜியோவின் Jio Plus திட்டம் அறிமுகம்! சலுகைகள் என்ன? ஜியோ
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு தமிழ்நாடு
    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை காங்கிரஸ்

    மத்திய பிரதேசம்

    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்நாடு
    நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சென்னை
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் ஆப்பிரிக்கா
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023