தெலங்கானாவில் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து 7 மாணவர்கள் தற்கொலை
தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 48 மணி நேரத்தில் தெலுங்கானா முழுவதும் 7 இடைநிலை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தெலுங்கானா இடைநிலைத் தேர்வு வாரியம் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது. அந்த தேர்வில் தோல்வியடைந்ததால் இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதாக மஹபூபாபாத் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மற்றொரு முதலாம் ஆண்டு மாணவர் தேர்வில் தோல்வியடைந்ததால் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாகக் காவல்துறை துணை ஆணையர்(கிழக்கு மண்டலம்) ஆர்.கிரிதர் தெரிவித்துள்ளார்.
தேர்வில் தேர்ச்சி பெறாததே மாணவர்களின் இறப்புக்கு காரணம்
நல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் ஜட்செர்லா என்ற இடத்தில் ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாததே அவனது மரணத்திற்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தேர்வில் தோல்வியடைந்ததால், மூன்று இடைநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று மாஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.