ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்!
மைசூரு-சென்னை இடையே பயன்பாட்டில் உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சில மாதங்களுக்கு முன்பு பிரதமரால் தொடங்கப்பட்டது. நவம்பர் 11, 2022 அன்று ரயில் சேவை தொடங்கியத்திலிருந்து, ரயிலின் 64 ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. ரயிலில் கல்லெறிதல் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது. சென்னை கோட்டத்தின் முதன்மை திட்ட மேலாளர் அனந்த், "80% க்கும் அதிகமான சம்பவங்கள் பெங்களூரு பிரிவின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளன" என்று கூறினார். பெங்களூரு கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் குசுமா "பெங்களூரு எல்லைக்குள் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததில், 26 ஜன்னல்கள் மாற்ற வேண்டியுள்ளது" என்றார். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 10 வரை தமிழ்நாட்டில் அனைத்து வகையான ரயில்களிலும் மொத்தம் 45 கல் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.
மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்
மே 6 அன்று சென்னை அரக்கோணம் அருகே ரயில் மீது கற்களை வீசியதற்காக ஒரு சிறுவனை தமிழ்நாடு ஆர்பிஎஃப் கைது செய்துள்ளது. அதில், 11 வயது சிறுவன் விளையாட்டாக ரயிலின் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதேபோல், பெங்களூரு பிரிவு காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானவர்கள் 10 முதல் 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் என்று TNMதெரிவித்துள்ளது. அபிஜித் அகர்வால் என்ற 36 வயது நபர் ரயிலின் மீது கற்களை வீசியதற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.