பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தீ விபத்து: 6 பேர் பலி
பீகார்: பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். "16,000க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தீ விபத்து வழிகாட்டுதல்நடத்தப்பட்டு இருக்கின்றன. தீ விபத்து வழிகாட்டுதலில் அவர்களுக்கு குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. சிலர் அதை பின்பற்றுகிறார்கள், சிலர் அதை பின்பற்றுவதில்லை. இது அலட்சியம் காரணமாக நிகழ்ந்த விபத்தாகும். முதல் பார்வையில், சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது." என்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊர்க்காவல்படை மற்றும் தீயணைப்பு துறை டிஜி ஷோபா ஓஹத்கர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததால் ஏற்பட்ட தீ விபத்து
"காலை 11 மணியளவில் தகவல் கிடைத்த பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். சரியான காரணம் விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்". என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நெரிசல் மிகுந்த பாட்னா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 30 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.