
தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று(ஏப்ரல்.,12) நடந்த சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் தகுதியான 500 மதுபான கடைகள் மூடப்படும் என்னும் அதிரடி அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்த அவர், தமிழ்நாட்டில் மொத்தம் 5,329 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதனுள் தகுதியான 500 மதுபான கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பினையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN "500 மதுபானக்கடைகள் மூடப்படும்"#TNAssembly #SenthilBalaji #Tasmac #News18TamilNadu https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/FLUPe5nsFP
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 12, 2023