குஜராத்தின் சூரத்தில் பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்
குஜராத்தின் சூரத்தில் இன்று பல மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூரத்தின் சச்சின் ஜிஐடிசி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திடீரென இடிந்து விழுந்த அந்த கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. தற்போது, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அந்த இடத்தில் உள்ள இடிபாடுகளை தீவிரமாக அகற்றி வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின்[படி, அது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாழடைந்த கட்டிடமாகும். அதில் வசித்து வந்த 10-15 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.