திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி
திமுக, பாஜக மற்றும் ஆளுநருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் காரணாமாக ட்விட்டரில் "5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்" என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. சமீபத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டை தமிழகம் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்" என்று கூறினார். அதையடுத்து, ட்விட்டரில் திமுக-பாஜகவுக்கு இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இரு தினங்களுக்கு முன், இந்த ஆண்டின் முதல் MLA கூட்டம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. இதில் ஆளுநரும் கலந்து கொண்டார். அன்று, ஆளுநர் வாசித்த உரையில் சில முக்கிய வார்த்தைகளை அவர் தவிர்த்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால், ஆளுநருக்கு எதிரான ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது, முதல்வர் பேசி கொண்டிருக்கும் போதே ஆளுநர் பாதியில் வெளியேறினார். இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தல-தளபதி படங்களை வைத்து மோதும் திமுக-பாஜக
இதன் தாக்கம் தற்போது ட்விட்டர் சண்டையாக மாறி இருக்கிறது. நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் சமீபத்தில் வெளி வந்தன. இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதில் நடிகர் அஜித் நடித்து வெளி வந்த துணிவு என்ற படத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒரு அதிகாரியிடம், "ரவீந்தர் இது தமிழ்நாடு.. உங்க வேலையை இங்கே காட்டாதீங்க'' என்று கூறி இருக்கிறார். இதை பிடித்து கொண்ட திமுகவினர் ஆளுநர் ரவிக்கு எதிராக இந்த வசனத்தை போட்டு ட்விட்டரில் #GetoutRavi என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கினர். தற்போது, பாஜகவினர் விஜய் நடித்த வாரிசு படத்தின் "5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்" என்ற 'பஞ்ச்' வசனத்தை பதிவிட்டு அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கின்றனர்.