LOADING...
கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்
உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவருக்கு நிகழ்ந்த சோகம்

எழுதியவர் Venkatalakshmi V
May 06, 2024
05:20 pm

செய்தி முன்னோட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவர், திருச்சியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவரது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, தனது நணபர்கள் 12 பேருடன் கன்னியாகுமரி வந்துள்ளார். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, சுற்றியுள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்றுள்ளது இந்த நண்பர்கள் குழு. அப்படி, இன்று காலை, லெமூர் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது 9 பேர் கடலில் இறங்கி குளித்த நிலையில், அவர்களை ராட்ச அலை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சிக்கியவர்களை மீட்டபோது, மூவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், மேலும் இருவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

embed

மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு

#NewsUpdate | வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால், ஒரே இடத்தில் இரு நாளில் 8 பேர் உயிரிழப்பு#SunNews | #Kanyakumari | #WeatherForecast pic.twitter.com/Ym2yzZJcsw— Sun News (@sunnewstamil) May 6, 2024