
டெல்லி வரை அதிர வைத்த நேபாள நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு
செய்தி முன்னோட்டம்
வடமேற்கு நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று(ஜன 24) பிற்பகல் 2:28 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்(NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும் அதன் மையம் உத்தரகாண்டின் பித்தோராகரில் இருந்து கிழக்கே 148 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்(EMSC) இதை 5.4 ரிக்டர் அளவாக கணித்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு(USGS) இதை 5.6 ரிக்டராகவும் இதன் ஆழம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 25.2 கி.மீ என்றும் அளவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இது குறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்(NCS) வெளியிட்ட தகவல்
Earthquake of Magnitude:5.8, Occurred on 24-01-2023, 14:28:31 IST, Lat: 29.41 Long: 81.68, Depth: 10 Km ,Location: Nepal for more information Download the BhooKamp App https://t.co/gSZOFnURgY@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @Ravi_MoES @OfficeOfDrJS @PMOIndia pic.twitter.com/y1Ak7VbvFB
— National Center for Seismology (@NCS_Earthquake) January 24, 2023