Page Loader
திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்
திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்

திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள்

எழுதியவர் Nivetha P
Feb 17, 2023
07:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 33சதவிகிதமாக உயர்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் பசுமை தமிழ்நாடு திட்டம் கடந்த 2021ம்ஆண்டு செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், தரம் குன்றிய காட்டுப்பகுதியிலுள்ள புதிய உள்நாட்டு மரக்கன்றுகளை நடவுசெய்து மேம்படுத்தவேண்டும் என்பதாகும். இதற்காக மாவட்ட வனஅலுவலர் ராம்மோகன் உத்தரவின் பேரில் திருத்தணி காப்புக்காடு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமராக்கள் மூலம் காடுகளில் மரங்களின் அடர்த்தி தன்மையை படம் எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, புதிய மரக்கன்றுகள் நடவுசெய்ய முடிவுசெய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. எனினும், இந்த திட்டங்களுக்கு தேவையான நாற்று, மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய அந்த வனசரகங்களில் போதிய இடம் மற்றும் தண்ணீர் வசதி ஏதும் இல்லை.

விவசாயிகளுக்கும் வழங்கப்படும்

பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் மரக்கன்றுகள்

இந்த காரணத்தினால் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனிமனிதனுக்கு சொந்தமான நிலப்பகுதியில் குத்தகைக்கு நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வன சரகர் அருள்நாதன் கூறுகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 45ஆயிரம் மரக்கன்றுகள் கன்னிகாபுரம் பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் தேக்கு, செம்மரம், நீர்மத்தி, இலுப்பை, புளியமரம், நெல்லி, உள்ளிட்ட பல வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகளை வரும் ஜூலை மாதம் திருத்தணி வனசரகத்தில் தரம் குன்றிய காடுகளில் புதிதாக நடவு செய்து வனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.