Page Loader
3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை
இதற்கான தீர்வு நடவடிக்கைகளை எடுக்க ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது

3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை

எழுதியவர் Sindhuja SM
Mar 15, 2023
06:49 pm

செய்தி முன்னோட்டம்

CRPF, BSF போன்ற மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் மொத்தம் 436 பேர், கடந்த 3 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று(மார் 15) தெரிவித்தார். CAPFகளில் தற்கொலைகள் மற்றும் சகோதர கொலைகளைத் தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், இதற்கான காரணிகள் மற்றும் ஆபத்துக் குழுக்களைக் கண்டறியவும் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில் தெரிவித்தார். மேலும், பணிக்குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். 2022ல் மொத்தம் 135 வீரர்களும், 2021ல் 157 பேரும், 2020ல் 144 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இதன் புள்ளிவிவரங்களை பகிர்ந்திருக்கும் ஒரு செய்தியாளரின் பதிவு